ரூ.2,200 கோடி லஞ்சப் புகார்: அதானி பங்கு 13% வரை வீழ்ச்சி

ரூ.2,200 கோடி லஞ்சப் புகார்: அதானி பங்கு 13% வரை வீழ்ச்சி

அ​தானி குழு​மத்​தின் ரூ.2,200 கோடி (265 மில்​லியன் டாலர்) லஞ்​சப் புகார் தொடர்​பாக, கவுதம் அதானி மற்​றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோ​ருக்கு சம்​மன் அனுப்ப அமெரிக்க நீதி​மன்​றத்​தின் அனு​ம​தியை அந்​நாட்​டுப் பங்​குச் சந்தை ஒழுங்​கு​முறை ஆணை​ய​மான எஸ்​இசி கோரி​யுள்​ளது.

கவுதம் அதானி மற்​றும் சாகர் அதானிக்கு சம்​மன் வழங்க இந்​திய அதி​காரி​களிடம் இருந்து போதிய ஒத்​துழைப்பு கிடைக்​க​வில்லை என்று எஸ்​இசி தெரி​வித்​துள்​ளது. எனவே, அவர்​களுக்கு மின்​னஞ்​சல் வாயி​லாக சம்​மன் அனுப்ப நியூ​யார்க் நீதி​மன்​றத்​திடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ள​தாக எஸ்​இசி தெரி​வித்​துள்​ளது.

இந்​தத் தகவலால் இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் அதானி குழும நிறு​வனங்​களின் பங்​கு​கள் நேற்​றைய வர்த்​தகத்​தில் 13%வரை சரிவைச் சந்​தித்​தன.

அதானி குழு​மத்​தின் முதன்மை நிறு​வன​மான அதானி எண்​டர்​பிரைசஸ் பங்கு விலை 10.76% சரிந்து ரூ. 1,861.80-க்கும், அதானி கிரீன் எனர்ஜி 13.81% சரிந்து 779.40-க்​கும் வர்த்தகமானது. இதன் எதிரொலி​யாக மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்டு எண் சென்​செக்ஸ் 769.67 புள்​ளி​கள் சரிந்து 81,537.70-ல் நிறைவடைந்​தது. நிப்டி 241.25 புள்​ளி​கள் வீழ்ச்​சி​யடைந்து 25,048.65 புள்​ளி​களில் நிலை பெற்​றது.