பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் பாதுகாப்பு ஆணையர் பிப்.11-ல் ஆய்வு

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் பாதுகாப்பு ஆணையர் பிப்.11-ல் ஆய்வு

சென்னையில் பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் அனைத்து கட்ட சோதனை பணிகளும் முடிக்கப்பட்டன. பின்னர், போரூர் வடபழனி இடையே கட்டமைப்புகள், சிக்னல் தொழில் நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, இத்தடத்திலும், வெற்றிகர மாக மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப் பட்டுள்ளது. தண்டவாள செயல்திறன், சிக்னலிங் அமைப்பு, ரயில் பெட்டி இணைப்பு திறன் தொடர்பான ஆய்வுகள் முடித்து. இதற்கான பாதுகாப்பு அறிக்கை, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பிப்.11-ம் தேதி சென்னை வருகிறார். அவரது தலைமையிலான குழு வினர் பிப்.11, 12. 13-ம் தேதிகளில் பூந்தமல்லி -வடபழனி வரையில் 16 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் முழுமையாக ஆய்வு நடத்த உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறியபோது,"ரயில் தண்ட வாளம், ரயில் பிரேக் தொழில்நுட்பம், பயணிகள் பாது காப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆய்வு நடத் தப்படும். 3-வது நாளில் மெட்ரோ ரயிலை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்துவார். இத்தடத்தில், பிப்ரவரி இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சில மாதங் களுக்கு பிறகு. படிப்படியாக ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும்" என்றனர்.