6 நாளுக்கு கனமழை நிலவரம் பல மாவட்டங்களை வெளுக்கும்

6 நாளுக்கு கனமழை நிலவரம் பல மாவட்டங்களை வெளுக்கும்

நம் நாட்டுக்கு அதிகளவு மழையை வழங்கும் தென்மேற்கு பருவ மழை நேற்று முடிந்தது. அதே நாளில் தமிழகத்துக்கு அதிக மழையை வழங்கும் வடகிழக்கு பருவமழை நேற்றே துவங்கியது.

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. தூத்துக்குடியில் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும்.

இன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் 19ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் 20ம் தேதி நீலகிரி, கோவை,தேனி,விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் .

21ம் தேதி நீலகிரி, கோவை,நாமக்கல்,திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் ;22ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் 23ம் தேதி நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.