ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தர்மர்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தர்மர்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர், எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்.
2022-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து இருந்தபோது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆர். தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒன்றியச் செயலாளராக இருந்த தர்மருக்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக-விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளராக தர்மர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க முடிவுசெய்த தர்மர், அவரை சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று மாலை சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார்.