விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.

’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு,அ தற்போது பாலாஜி தரணீதரன் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

அட்லி தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் இருவருடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.