ராஸ்மிகா மந்தனா எங்கே... கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்
சங்கராந்தி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருந்தார். அதில் அவரும், அவரின் குடும்பத்தினரும் மட்டும் இருந்தனர்.
அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் ஆன ராஸ்மிகா மந்தனா புகைப்படத்தில் இல்லை. அதேபோல், 2 பேர் எடுத்த புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
இதையடுத்து ராஸ்மிகா மந்தனாவை புகைப்படத்தில் காணவில்லையே, அவரை எங்கே என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
புஸ்பா 2 திரைப்பட வெளியீட்டிற்காக ஜப்பானுக்கு ராஸ்மிகா மந்தனா சென்றுள்ளார். இதனால் 2 பேரும் சங்கராந்தியை சேர்ந்து கொண்டாடவில்லை எனக் கூறப்படுகிறது.