அக்.31-ல் ஓடிடியில் வெளியாகிறது ‘காந்தாரா: சாப்டர் 1’
அக்டோபர் 31-ம் தேதி ஓடிடி தளத்தில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியளவில் வரவேற்பைப் பெற்றதால், இப்படம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும் என கருதப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அக்டோபர் 31-ம் தேதி ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும், 2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.