ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு முன்​னேறி​னார் அல்​க​ராஸ்!

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்கு முன்​னேறி​னார் அல்​க​ராஸ்!

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்கால் இறுதி சுற்​றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்​கா​வின் கோ கோ காஃபை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்​தார் உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலி​னா. அதேவேளை​யில் ஆடவர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான ஆஸ்​திரேலிய ஓபன் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று கால் இறுதி சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவில் 3-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்ஸாண்டர் ஜிவேரெவ், 20 வயதான 25-ம் நிலை வீரரான அமெரிக்​கா​வின் லேர்​னர் டியனுடன் மோதி​னார்.

மற்​றொரு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீர​ரான ஸ்பெயினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 6-ம் நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினாருடன் பலப்பரீட்சை நடத்​தி​னார். இதில் அல்​க​ராஸ் 7-5, 6-2, 6-1 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்​னேறி​னார். அரை இறு​தி​யில் அல்​க​ராஸ் - அலெக்​ஸாண்​டர் ஜிவேரெவ் மோதுகின்​றனர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்​கா, 18 வயதான 29-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் இவா ஜோவிக்​குடன் மோதி​னார். இதில் சபலென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அரை இறு​தி​யில் ஸ்விட்​டோலி​னா, சபலென்கா​வுடன்​ மோதுகிறார்​.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃபுக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்தை திருப்புகிறார் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா.