10 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி மூலம் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் பேருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகவும், அரசு மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதிய பணியாளர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி மூலம் 5,307 பேர், டிஆர்பி மூலம் 1,700 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், எம்ஆர்பி வாயிலாக ஏறத்தாழ 3 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.