மாமல்லபுரத்தில் இன்று யு-20 மகளிர் கால்பந்து போட்டி
யு-20 இந்திய மகளிர் கால்பந்து அணி உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக 2 நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இதன் முதல் ஆட்டம் இன்று மாலை 5 அணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள எஃப்சி மெட்ராஸ் அகாடமியில் நடைபெறுகிறது. 2-வது போட்டி டிசம்பர் 2-ம் தேதி இதே அகாடமியில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளுக்கான 24 பேர் கொண்ட யு-20 இந்திய மகளிர் அணியை தலைமை பயிற்சியாளர் ஜோகிம் அலெக்சாண்டர்சன் அறிவித்துள்ளார்.