ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நிதி அகர்வாலிடம் விசாரணை

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நிதி அகர்வாலிடம் விசாரணை

தெலங்கானா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா, நிதி அகர்வால் உள்பட 29 திரையுலக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயலிகள் மூலம் எளிய மற்றும் நடுத்தர மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபடத் தூண்டி, அவர்களுக்குப் பண இழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகை நிதி அகர்வால், தமிழில் சிம்பு ஹீரோவாக நடித்த ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் ஜோடியாக ‘பூமி’, உதயநிதி ஜோடியாக ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபாஸின் ‘த ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார்.