“கதை கேட்காமல் ஒப்பந்தமான ஒரே படம்!” - ராஷி கன்னா தகவல்

“கதை கேட்காமல் ஒப்பந்தமான ஒரே படம்!” - ராஷி கன்னா தகவல்

நடிகை ராஷி கன்​னா, தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்​கமறு’, ‘திருச்​சிற்​றம்​பலம்’, ‘அரண்​மனை 4’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார்.

இந்​தி​யில் அவர் நடித்​துள்ள ‘120 பகதூர்’ சமீபத்தில் வெளி​யாகி இருக்​கிறது. தெலுங்​கில் ‘உஸ்​தாத் பகத்சிங்’ என்ற படத்​தில் பவன் கல்​யாண் ஜோடி​யாக நடித்​துள்​ளார். இந்​தப் படத்​தில் நடிக்க, கதை கேட்​காமல் ஒப்​பந்​த​மானேன் என்று ராஷி கன்னா கூறி​யுள்​ளார்.

பவன் கல்​யாண் பெண்​களை மதிக்​கிறார் என்​பது எனக்​குப் பிடிக்​கும். அடுத்து அவர் சாதாரண மக்​களை மிக​வும் நேசிக்​கிறார். இதையெல்​லாம் தாண்​டி, அவர் ஒரு நல்ல நடிகர். நல்ல நகைச்​சுவை உணர்வு கொண்​ட​வர். நான் வியந்த விஷ​யங்​களைப் படப்​பிடிப்பில் பார்த்​தேன். அவர் உயரம் பற்றி அவருக்கே தெரிய​வில்லை என நினைக்​கிறேன்​” என்​றார்​.