24 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்! விரைவில் சேவை துவக்கம்!
தூங்கும் வசதி கொண்ட 24 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை ரயில்வே விரைவில் இயக்கவுள்ளது.
தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலும், 16 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலும் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களுக்கு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து விரைவில் 24 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை சென்னையில் இருந்து இந்தாண்டு இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலில் 823 இருக்கைகளே இருக்கும். ஆனால் 20 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலில் 1,224 இருக்கைகள் இருக்கும்.
ஆதலால் 20 பெட்டிகளை கொண்ட ரயிலில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும். தற்போது 24 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் அப்பணி முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.