இன்னும் 42 ரன்கள் எடுத்தால் 2-ம் இடம் - விராட் கோலிக்கு கிடைத்த தரமான சான்ஸ்!

இன்னும் 42 ரன்கள் எடுத்தால் 2-ம் இடம்   - விராட் கோலிக்கு கிடைத்த தரமான சான்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேற இன்னும் 42 ரன்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தின் மீது குவிந்துள்ளது.

 சர்வதேச கிரிக்கெட்டில்   அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்ஸ்களில் விளையாடி 34,357 ரன்களை விளாசி இருக்கிறார்.

இவருக்கு பின் 2வது இடத்தில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 666 இன்னிங்ஸ்களில் விளையாடி 28,016 ரன்களை குவித்துள்ளார்

தற்போது விராட் கோலிக்கு சங்கக்காராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை விராட் கோலி 623 இன்னிங்ஸ்களில் விளையாடி 27,975 ரன்களை குவித்திருக்கிறார்.

இன்னும் 42 ரன்களை எடுத்தால், சங்கக்காராவின் சாதனையை எளிதாக முறியடிக்க முடியும். அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 93 ரன்களை கடந்தால், சச்சின் டெண்டுல்கரின் முக்கியமான சாதனையையும் முறியடிக்க முடியும்.

இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 41 இன்னிங்ஸ்களில் 1,750 ரன்களை சேர்த்துள்ளார்.

தற்போது விராட் கோலி 33 இன்னிங்ஸ்களில் 1,657 ரன்களை சேர்த்து இருக்கிறார். இதனால் விராட் கோலி இந்த இரு சாதனைகளையும் எளிதாக முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.