95 பந்துகளில் 171 ரன்கள்... சூர்யவன்ஷி மரண அடி

95 பந்துகளில் 171 ரன்கள்... சூர்யவன்ஷி மரண அடி

நடப்பு யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வீரர் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசி அசத்தினார்.

யு19 ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் துபா​யில் இன்று தொடங்​​கயது. இதில் இந்​தியா உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொண்டுள்ளன. இவை 2 பிரிவு​களாக பிரிக்கப்பட்​டுள்​ளன. இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம்பெற்றுள்ளது. இதே பிரி​வில் மலேசி​யா, பாகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​திய அணி இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) அணியுடன் விளையாடியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 433 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி, 95 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இதில் 14 சிக்ஸர்களை அவர் விளாசினார். விஹான் மல்ஹோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் தலா 69 ரன்கள் எடுத்தனர்.