தேர்தல் இருப்பதால் இன்னும் 10 முறையாவது பிரதமர் தமிழகம் வருவார்: உதயநிதி கருத்து

தேர்தல் இருப்பதால் இன்னும் 10 முறையாவது பிரதமர் தமிழகம் வருவார்: உதயநிதி கருத்து

சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருப்​ப​தால் தமிழகத்​துக்கு இன்​னும் 10 முறை​யா​வது பிரதமர் மோடி வரு​வார் என்று சட்​டப்​பேர​வை​யில் துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார்.

பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான விவாதத்​தில் உறுப்​பினர்​கள் பேசி​ய​போது மினி ஸ்டேடி​யம் தொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி விளக்​கம் அளித்து பேசி​ய​தாவது: அதி​முக உறுப்​பினர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி பேசும்​போது,தொகு​திதோறும் சிறு விளையாட்டு அரங்​கங்​களை கட்​டவில்லை என்றார்.

தமிழகத்​தில் மாநகரங்​களில் மட்டுமல்​லாமல், கிராமங்​களி​லும் திறமை​யான விளை​யாட்டு வீரர்​களை உரு​வாக்க தொகு​தி​வாரி​யாக மினி ஸ்டேடி​யம் அமைக்​கும் உத்தரவை முதல்​வர் பிறப்​பித்​தார்.

அதன்​படி, 82 தொகு​தி​களில் ஸ்டேடி​யம் கட்ட அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. 80 ஸ்டேடி​யங்​களில் பணிகள் தொடங்கப்​பட்டு 8 ஸ்டேடி​யங்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. மீத​முள்ளவை பிப்​ரவரி இறு​திக்​குள் கட்டப்​படும். ஆளுங்​கட்சி– எதிர்க்​கட்சி என பார​பட்​சமின்றி அனைத்து தொகு​தி​களி​லும் இந்த முயற்சி நடக்கிறது.

ஆனால், அவர்​கள் என்ன செய்​தார்​கள், 2017 மதுரை​யில் எய்ம்ஸ் கொண்டு வரப்​போவ​தாகச் சொல்​லி, 2019-ல் அதற்​கான ஒற்றை செங்​கல்லை வைத்​தனர். 8 ஆண்​டு​கள் ஆகி​யும் கட்டி முடிக்​கப்​பட​வில்​லை. பிரதமர் சென்​னைக்கு வந்​திருக்​கிறார். தேர்​தல் வரப் போகிறது. இனி, 10 முறை​யா​வது வந்​து​விடுவார். அவரை மதுரைக்கு கூட்டிச்சென்​று, எய்ம்​ஸுக்கு விடிவு​காலம் வரச் செய்ய வேண்டும். அதற்காக தமிழக மக்​கள்​ நன்​றிசொல்​வர்​. இவ்​வாறு உதயநிதி கூறி​னார்​.