தேசிய வேலை உறுதி திட்டம் தொடர்பான முதல்வரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

தேசிய வேலை உறுதி திட்டம் தொடர்பான முதல்வரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்​டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்​டும். இதற்​கான நிதி பங்​களிப்பை குறைக்க கூடாது என்று வலி​யுறுத்தி முதல்​வர் ஸ்டா​லின் கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (MGNREGA) மாற்றாக, விக்​‌ஷித் பாரத் ஊரக வேலை, வாழ்​வா​தார உறுதி இயக்​கம் (VB-G RAM G) என்ற திட்டத்தை மத்​திய அரசு அமல்​படுத்​தி​யுள்​ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தமிழக சட்​டப்​பேர​வை​யில் கேள்வி நேரத்​துக்கு பிறகு, அரசினர் தனித் தீர்​மானம் ஒன்றை முதல்​வர் ஸ்டா​லின் கொண்டு வந்தார். அதன் விவரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டம் 2005-ன் ​படி, கிராமப்​புற மக்​களுக்கு வேலை​வாய்ப்பு உறுதி செய்​யப்​படு​வதுடன், மாநில செயல்​திறன் அடிப்​படை​யில் தொடர்ந்து நிதி ஒதுக்​கீடு செய்​வது உறு​தி​செய்​யப்பட வேண்​டும்.

இந்த திட்​டத்​தின்​கீழ் மாற்​றுத் திற​னாளி​கள், ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யினர் தொடர்ந்து பயனடைந்​தனர். அவர்​களது வாழ்​வா​தா​ரம் தொடர்ந்து பாது​காக்​கப்​பட, முந்​தைய ஆண்​டு​களின் ஒதுக்​கீட்​டுக்கு குறை​யாமல் நிதி ஒதுக்​கு​வது உறுதி செய்​யப்பட வேண்​டும். புதிய நடை​முறையை கைவிட்​டு, வேலைக்​கான தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்​கீடு செய்​யும் முறையை தொடர வேண்​டும். கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கு மதிப்பு அளித்​து, வேலைக்​கான தேவைக்கு ஏற்பமாநிலங்​களுக்​கான ஒதுக்​கீட்டை பகிர்ந்​தளிக்​கும் வழி​முறையை மாநில அரசே வகுத்​துக் கொள்ள அனு​மதி அளிக்க வேண்​டும்.

தவிர, புதிய திட்​டத்​தில் மாநில அரசின் பங்​களிப்பு 40 சதவீத​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதனால், மாநில அரசின் நிதிச்​சுமை அதி​கரிக்​கும். அதை திருத்​தி​யமைக்க வேண்​டும். மேலும், பல்​வேறு உள்​நோக்​கங்​களை கொண்டு இத்​திட்​டத்​துக்கு ‘வளர்ச்சி அடைந்த இந்​தியா - ஊரக வேலை உறுதி மற்​றும் வாழ்​வா​தார இயக்​கம் - ஊரகம் (விபி-ஜி ராம் ஜி) என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது.

மகாத்மா காந்​தி, இந்த தேசத்​துக்கு வகுத்து தந்த கொள்​கைகள், வழி​காட்​டிய பாதையை எப்​போதும் நினை​வு​ கூரும் வகை​யில் இத்​திட்​டம் அவரது பெயரிலேயே தொடர வேண்​டும் என்​றும் மத்​திய அரசை இந்த பேரவை ஒருமன​தாக வலி​யுறுத்​துகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த தீர்​மானத்தை முன்மொழிந்து முதல்​வர் ஸ்டா​லின் பேசி​னார். இதைத் தொடர்ந்​து, உறுப்​பினர்​கள் பேசினர். பின்​னர்​, முதல்​வர்​ ஸ்டா​லின்​ முன்​மொழிந்​த தீர்​மானம், குரல்​ வாக்​கெடுப்​பு மூலம்​ ஒருமன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.