டி20 பேட்ஸ்மேன் தரவரிசை... திலக் வர்மா அதிரடி முன்னேற்றம்
டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர் திலக் வர்மா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டித் தொடரில் திலக் வர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இதையடுத்து தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் இருந்த திலக் வர்மா 2 இடங்கள் முன்னேறி 4வது இடத்திற்கு வந்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் அபிசேக் சர்மா இதுவரை 3 டி20 போட்டிகளிலும் 69 ரன்களே எடுத்துள்ளார். எனினும் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ள இந்திய அணி வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டி ஹாக் 14 இடங்கள் முன்னேறி, 53-வது இடத்திற்கு வந்துள்ளார்.