கடும் பனி மூட்டம்: 4வது டி20 போட்டி கைவிடப்பட்டது
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
லக்னோவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமலேயே கைவிடப்பட்டது.
ஏற்கெனவே நடந்த 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற இருந்தது.
ஆனால் லக்னோவில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் போட்டித் தொடங்குவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
மைதானத்தில் 2 முறை ஆய்வு செய்து பார்த்த நடுவர்கள், நிலைமை சீராகாததை அடுத்து 4வது டி20 போட்டி கைவிடப்படுவதாக தெரிவித்தனர்.
இரு அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வென்றால், தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க வென்றால் டி20 போட்டித் தொடர் சமனில் முடிவடையும்.
Admin Jan 16, 2026 0 95
Admin Jan 17, 2026 0 69
Admin Jan 18, 2026 0 62
Admin Jan 20, 2026 0 55
Admin Jan 20, 2026 0 53
Admin Oct 24, 2025 0 39
Admin Oct 24, 2025 0 27
Admin Oct 24, 2025 0 48
Admin Oct 24, 2025 0 17
Admin Jan 16, 2026 0 12
Admin Jan 16, 2026 0 25
Admin Dec 25, 2025 0 52
மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக்...