யு19 ஆசிய கோப்பை: அரையிறுதியில் இலங்கையுடன் மோதும் இந்தியா

யு19 ஆசிய கோப்பை: அரையிறுதியில் இலங்கையுடன் மோதும் இந்தியா

யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி வருகிற 19-ம் தேதி எதிர்கொள்கிறது.

துபாயில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இலங்கையை வங்கதேசம் அணி துவம்சம் செய்தது. 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அந்த அணி குருப் பி பிரிவில் முதலிடம் பிடித்தது.

இதையடுத்து அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியது. இதன்படி, வருகிற 19-ம் தேதி துபாயில் நடைபெறும் 2 அரையிறுதி போட்டிகளில் எந்தெந்த அணிகள் மோதவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முதல் அரையிறுதியில் இந்தியாவும், இலங்கை அணியும் மோதுகின்றன. 2வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன.