1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு... தமிழகம் முழுவதும் 46 மையங்களில் தேர்வு

1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு... தமிழகம் முழுவதும் 46 மையங்களில் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தேர்வெழுதி வருகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல்துறைக்கு 1,299 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து 390 பேருக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இன்று இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறுகிறது. முதல் கட்டமாக காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும், 46 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.