ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் கைது
பத்து வழக்கில், லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த மாதம், 14ம் தேதி தொம்பரம்பேடு பகுதியில் காரில் சென்றார். அப்போது, எதிரே வந்த பைக்கில் கார் மோதியது. இதில், அஜித்குமார் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில், அஜித்குமார் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி, எஸ்.எஸ்.ஐ., பாஸ்கருக்கு லஞ்சம் கொடுக்க, அஜித்குமார் காவல் நிலையம் சென்றார். அப்போது, அவர் அங்கு இல்லை.
அவரை மொபைலில் தொடர்பு கொண்ட போது, தான் வெளியே இருப்பதாகவும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் சுகுமாரிடம் பணத்தை கொடுக்குமாறும், எஸ்.எஸ்.ஐ., பாஸ்கர் கூறியுள்ளார். அதனால், ரசாயனம் தடவிய பணத்தை, சுகுமாரிடம் அஜித்குமார் கொடுத்தார்.
அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார், சுகுமாரை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரும் கைது செய்யப்பட்டார். இருவரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.