‘அனலி’யில் ஒரே இரவில் நடக்கும் கதை!

‘அனலி’யில் ஒரே இரவில் நடக்கும் கதை!

அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’. சக்தி வாசுதேவன், சிந்தியா லூர்டே, குமரவேல், இனியா, கபிர் துஹான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கணேஷ் கே பாபு வெளியிட்டனர்.

படம் பற்றி இயக்குநர் தினேஷ் தீனா கூறும்போது, “இதன் கதை ஒரே இரவில் நடக்கிறது. ஒரு கூட்டத்திடம் குழந்தையுடன் சிக்கிக் கொள்ளும் நாயகி, புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை.

10 ஆயிரம் கன்டெயினர்கள் கொண்ட யார்டில் பிரம்மாண்டமான செட் அமைத்து ஒரு சண்டைக் காட்சியை படமாக்கி இருக்கிறோம். அது மிரட்டலாக இருக்கும்” என்றார் இயக்குநர்.