வி.சாந்தாராம் ‘பயோபிக்’கில் இணைந்தார் தமன்னா!

வி.சாந்தாராம் ‘பயோபிக்’கில் இணைந்தார் தமன்னா!

பிரபல இந்தி திரைப்பட இயக்​குநரும் தயாரிப்​பாள​ரு​மான வி.​சாந்​தா​ராமின் வாழ்க்​கைக் கதை சினி​மா​வாகிறது. 1940 மற்​றும் 1950-களில் பல இந்தி மற்​றும் மராத்தி திரைப்​படங்​களை இயக்​கிய​வர் இவர். இந்​திய அளவில் அவருக்குப் புகழைச் சேர்த்த ‘பர்​சா​யின்’, ‘ஆத்​மி’, ‘சகுந்​தலா’, தஹேஜ், ‘படோஸி’, ‘சந்திரசே​னா’ உள்பட பல படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

‘தோ ஆங்​கேன் பாரஹாத்’ எனும் இந்தி படம் இவருக்​குப் பல விருதுகளைப் பெற்​றுக் கொடுத்​தது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற படத்​தில் இந்​தி​யா​வின் முதல், டெக்​னிக் கலரை பயன்படுத்தி இயக்​கிய​வர் இவர். இவருடைய வாழ்க்​கைக் கதையை மையப்​படுத்தி ‘சித்​ரபதி வி சாந்​தா​ராம்’ என்ற பெயரில் திரைப்​படம் உரு​வாகிறது.

“இந்​திய சினி​மாவுக்கு வி.​சாந்​தா​ராமின் பங்கு மகத்​தானது. அவரைப் பற்றி இந்த தலை​முறை​யினர் தெரிந்து கொள்​ளும் வகை​யில் இப்​படம் உரு​வாகிறது” என்று படக் குழு தெரிவித்துள்ளது.