திருமணம் கைவிடப்பட்டு விட்டது... உறுதி செய்த ஸ்மிருதி மந்தனா
திருமணம் கைவிடப்பட்டு (ரத்து) விட்டதாக இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஸ் முசலுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. இந்நிலையில், மந்தனாவின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் திருமணம் தடைபட்டது.
இதையடுத்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தது. இதுகுறித்து ஸ்மிருதி மந்தனா தற்போது மவுனம் கலைத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், திருமணம் கைவிடப்பட்டு விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தனது தனிமனித சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். அந்த தொடரில் 434 ரன்களை அவர் விளாசினார்.