ஆஷஸ்: 2வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஷஸ் தொடரில் 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிப் பெற்றது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களை சேர்த்தது. அந்த அணி வீரர் ஜோ ரூட் 138 ரன்கள் அடித்தார். க்ராலே 76 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்களை குவித்து முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் ஸ்டார்க் அதிகபட்சமாக 77 ரன்கள் அடித்தார்.
பின்னர் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி வீரர் மைக்கேல் நேசர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இங்கிலாந்து அணி சுருண்டது.
பின்னர் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. 2 அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.