ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: சிம்பு வேண்டுகோள்

ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: சிம்பு வேண்டுகோள்

ஒரு நடிகருடன் மற்றொருவரை ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளிக்கு ‘டியூட்’, ‘பைசன்: காளமாடன்’ மற்றும் ‘டீசல்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு தனது பதிவில், ”அன்பார்ந்த ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது. ‘டீசல்’, ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இதனை ஒப்பிடுவதை நிறுத்துவிட்டு, நம் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக அவர்களைக் கொண்டாடத் தொடங்குவோம். உள்ளே நுழைந்தவர்களை, உள்ளே புதிதாக நுழைபவர்களை, உள்ளே நுழைய காத்திருப்பவர்களை ஆதரிக்கவும், ஒன்றாக இந்த சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தீபாவளி விருந்தாக இந்த ப்ரோமோவை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.