ரூ.700 கோடி வசூலை கடந்தது ‘காந்தாரா: சாப்டர் 1’

உலகளவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைக் கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் வெளியான அன்று வசூல் குறைவாக இருந்தாலும், அடுத்டுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது. தற்போது இப்படம் ரூ.700 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் ரூ.68.5 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை புரிந்திருக்கிறது. இதனால் இப்படத்தின் விநியோகஸ்தர்கள் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அனைவருக்குமே கொடுத்த பணத்தைத் தாண்டி லாபம் கிடைத்திருக்கிறது. தீபாவளி வெளியீட்டு படங்களைத் தாண்டி பல்வேறு திரையரங்குகளில் இப்போதும் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரையிடப்பட்டு வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஹோம்பாளே நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பாளராகவும், அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவாளராகவும், பங்கலான் தயாரிப்பு வடிமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்கள்.