பாமகவில் நாளை முதல் நேர்காணல்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

பாமகவில் நாளை முதல் நேர்காணல்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளரகளை தேர்வு செய்வதற்காக பாமகவில் நாளை முதல் நேர்காணல் நடைபெற இருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமனுக்கள் பெறப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு காலை 10.00 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமனு அளித்தவர்களுடன் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

தேதி

மாவட்டங்கள்

31.1.2026 – சனி

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

1.2.2026 – ஞாயிறு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கரூர், புதுச்சேரி

2.2.2026 – திங்கள்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை