விஜயின் அரசியலில்.. இனி நடக்க போகும் 8 விஷயங்கள்.. நிலைமை கையை மீறி போயிடுச்சு.. ட்விஸ்ட்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பெரிய சிக்கலை சந்தித்து உள்ளது. விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். கட்சி தொடங்கி 1 வருடத்தில்.. விஜய் எதிர்பார்க்காத நெருக்கடிகளை சந்தித்து உள்ளார். கரூர் சம்பவம் காரணமாக அடுத்த சில நாட்களில் விஜயின் அரசியலில் 8 முக்கியமான விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
1. விஜய் மீது மாவட்ட அளவில் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகிகளை காக்க தவறிவிட்டார். அவர்களுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என்ற புகார் உள்ளது. இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் விஜய்க்கு எதிராக திரும்பலாம்.
2. விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம். விஜய் பாஜகவுடன் பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம்.
3. விஜய் அதிமுகவுடன் நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று தர்மபுரியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கரூரில் செப்டம்பர் 27 ஆம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல் என்று எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார். இதனால் விஜய் அதிமுகவுடன் நெருக்கமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
4. சட்ட ரீதியாக விஜய் கடுமையாக பாதிக்கப்படலாம். சட்ட ரீதியாக வழக்குகள் விஜய்க்கு எதிராக திரும்பலாம். விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விஜய்க்குத்தான் சிக்கல். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மிக லேட்டாக கூட்டத்திற்கு வந்தது. அதோடு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்று சில இடங்களில் காத்திருந்தார். அதன்பின் போலீஸ் சொன்ன அறிவுரைகளை கேட்கவில்லை. இதெல்லாம் விஜக்கு எதிராக சென்றுள்ளது.
5. விஜய் தன்னை காத்துக்கொள்ள - பாஜக - அதிமுக கூட்டணியில் ஐக்கியம் ஆகலாம்.
6. விஜய் தற்காலிகமாக.. அல்லது ஜனவரி வரை தனது தேர்தல் பயணத்தை மொத்தமாக நிறுத்தலாம். அல்லது தேர்தல் பயணத்தை அரசியல் கூட்டமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன.
7. இன்னொரு பக்கம் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் டாப் தலைகளுக்கு இடையிலேயே மோதல் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அசம்பாவிதத்திற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரியாமல் இவர்களுக்கு இடையே மாறி மாறி பழி போட்டு.. அதுவே இவர்களுக்கு இடையே கடுமையான மோதலாக மாறிவிட்டது.
8. கட்சிக்கு உள்ளேயே ஆதவ் அர்ஜுனா - அருண் - ஜான் ஆரோக்கியசாமி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது. என்றால் கரூரில் திடீரென கூட்டம் நடத்த வேண்டும் என்று ஐடியா கொடுத்தது ஒருவர்.. அதற்கு தீவிரமாக பல மாவட்டங்களில் இருந்து கூட்டம் கூட்டியது இன்னொருவர் .. அங்கே மெதுவாகபோகலாம் . தாமதமாக போகலாம் என்று வியூகங்களை வகுத்தது இன்னொருவர். இதனால் உட்கட்சி மோதல் உச்சம் எடுத்துள்ளது.