கரூர் சம்பவம்: விஜய் பிரசாரத்துக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்..? - சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு

கரூர் சம்பவம்: விஜய் பிரசாரத்துக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்..? - சரமாரி கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணைஇன்று தொடங்கியது.

அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது நீதிபதிகள் அரசு தரபிடமும், தவெகவிடமும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;

""மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே?விஜய் பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்." இதற்கு அரசு தரப்பு கூறும்போது; "அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அனுமதி அளிக்கப்பட்டது. சாலையின் வடக்கேதான் அனுமதி வழங்கப்பட்டது." என்றனர்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், "பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம். பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்த்து இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்" என உத்தரவிட்டனர்.