பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் வருவதை முன்னிட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து மாற்றம்

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் வருவதை முன்னிட்டு மதுராந்தகத்தில் போக்குவரத்து மாற்றம்

தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மது​ராந்​தகத்​தில் இன்று நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க உள்​ள​தால், பாது​காப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்​துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்​நாட்​டில் அதி​முக தலை​மை​யில் உரு​வாகி​யுள்ள தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பொதுக்​கூட்​டம் இன்று மது​ராந்​தகத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் மோடி, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பங்கேற்க உள்​ளனர்.

தமிழக காவல்​துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழ்​நாடு முழு​வதும் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து 3,500-க்கும் மேற்​பட்ட காவலர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடுபட உள்​ளனர்.

கூட்​டம் நடை​பெறும் இடத்​தில் 7 அடுக்கு பாது​காப்பு கொடுக்​கப்பட உள்​ளது. பத்து இடங்​களில் வாக​னம் நிறுத்​து​வதற்​கான வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் கட்சி தொண்​டர்​களின் வசதிக்​காக ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான நாற்​காலிகள் போடப்​பட்​டுள்​ளன.

இதன்​படி, ஜன.23-ம் தேதி (இன்​று) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இச்​சாலை​யில் வாகன போக்குவரத்து மாற்​றப்​பட்​டுள்​ளது.

சென்​னையி​லிருந்து தென்​மாவட்​டங்​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் அனைத்​தும் ஈசிஆர் சாலை மூலம் மரக்​காணம் வழி​யாக திண்​டிவனம் செல்ல வேண்​டும். திண்​டிவனம் மார்க்​கத்​திலிருந்து வரும் வாக​னங்​கள் காஞ்​சிபுரம் வழி​யாக சென்​னைக்கு செல்​லலாம்.