ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக வீரர் பிரதோஷ் சதம்
விதர்பா அணிக்கெதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டி கோயம்புத்தூரிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் தமிழக அணியின் அதிஷ் 4, விமல் குமார் 2, ஆந்தரே சித்தார்த் 33 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக ஆடி 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாபா இந்திரஜித் 94 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில் இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.