பிங்க் பால் டெஸ்டில் பாட் கம்மின்ஸ் இல்லை
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் 4-ம் தேதி 2-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டி பிங்க் பால் போட்டியாக நடத்தப்பட உள்ளது.