பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித் காலமானார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ராபின் ஸ்மித் காலமானார். அவருக்கு வயது 62.
அதிரடி பேட்ஸ்மேன், வேகபந்து வீச்சாளர் என ஆல்ரவுண்டராக அவர் ஜொலித்துள்ளார். 1988 முதல் 1996ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4,236 ரன்களை சேர்த்துள்ளார். இது பேட்டிங் சராசரி 43.67 சதவீதம் ஆகும்.
மொத்தம் 9 சதங்களை அவர் விளாசியுள்ளார். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்த 3 சதங்களும் அடங்கும். 1993ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 165 ரன்களை விளாசினார். இந்த சாதனையை 2016ம் ஆண்டு வரை எந்த வீரர்களும் முறியடிக்கவில்லை.
தெ.ஆப்பிரிக்காவில் பிறந்த போதிலும், பிறகு இங்கிலாந்து வந்து அந்நாட்டு அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். 2004-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கடைசி காலத்தில் ஆஸ்திரேலியாவில் அவர் வசித்தார். இந்நிலையில் அவர் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.