ல்மான் ஆகா, ரிஸ்வான் அரைசதம் - தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது.
அந்தவகையில் ஃபைசலாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
இதில் பிரிட்டோரியஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களைச் சேர்த்திருந்த குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் கேப்டன் மேத்யூ பிரீட்ஸ்கே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் பெரிதளவின் ரன்களைச் சேர்க்க தவறி பெவிலியன் திரும்பினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபகர் ஜமான் 45 ரன்களிலும், சைம் அயுப் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் 7 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த முகமது ரிஸ்வான் - சல்மான் அலி ஆகா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்,
இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ரிஸ்வான் 55 ரன்களுக்கும், சல்மான் ஆகா 62 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹுசைன் தாலத், ஹசன் நவாஸ், முகமது நவாஸ் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இருப்பினும் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கு உதவிய சல்மான் ஆகா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் நடைபெறவுள்ளது.