ஐசிசி யு19 உலகக் கோப்பை 2026: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

ஐசிசி யு19 உலகக் கோப்பை 2026: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

வங்கதேச அணிக்கு எதிரான யு19 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஐசிசி ஆடவர் யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புலவாயோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களிலும், வேதந்த் திரிவேதி ரன்கள் ஏதுமின்றியும், விஹான் மல்ஹோத்ரா 7 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி - அபிக்யான் குண்டு இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.

இதன் காரணமாக வங்கதேச அணி 28.3 ஓவர்களில் 146 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஹான் மல்ஹோத்ரா 4 விக்கெட்டுகளையும், கிலான் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய யு19 அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச யு19 அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் நடப்பு யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விஹான் மல்ஹோத்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.