காசா அமைதி திட்டத்தில் மாற்றம் செய்ய அவசியமில்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

''காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில், காசா திட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிபர் டிரம்ப் அளித்த பதில்: காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். திட்டம் அமலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும்.
பிணைக்கைதிகளை உடனடியாக மீட்போம். இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அநேகமாக இரண்டு நாட்கள் ஆகும். இது, முழு அரபு உலகத்திற்கும், முஸ்லிம் உலகத்திற்கும் ஒரு பெரிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.