பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் முடிவுக்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் வரவேற்பு

பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸின் முடிவுக்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் வரவேற்பு

காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்று, இஸ்ரலிய பணய கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக வர்ணித்தன.

பிணைக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
இது ஒரு முக்கியமான முன்னேற்றப் படி என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

ஹமாஸின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்.

நிரந்தர போர் நிறுத்தம் உடனடியாக நிறுவப்பட வேண்டும், அனைத்து பணயக்கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.