ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை... சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் பீதி

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை... சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் பீதி
ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜப்பானின் அமோரி மாகாணத்தில் மிசாவாவில் இருந்து கிழக்கு பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், அதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஜப்பான் அதிகாரிகளும், அரசும் பொதுமக்களை அலெர்ட் செய்து வருகின்றனர்.