ஆதார் திருத்தத்திற்கு புதிய செயலி! மத்திய அரசு அறிமுகம்
ஆதாரில் உள்ள முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை திருத்த புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் தகவலை திருத்தவும், அப்டேட் செய்யவும் இ-சேவை மையம் அல்லது தபால் நிலையங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தற்போது உள்ளது. இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து, அதை சரி செய்யும் நோக்கில் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம் ஆதாரில் எளிதில் முகவரியை திருத்த முடியும். செல்போன் எண்ணையும் எளிதில் மாற்ற முடியும். இவை அனைத்தும் சில நிமிடங்களில் முடிந்து விடும்.
அதேபோல் இந்த செயலியில் 5 பேரின் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். ஆதலால் இனி ஆதார் அட்டையையோ அல்லது நகலையோ கைகளில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
செல்போனில் இருக்கும் இந்த செயலியை தேவைப்படும் இடத்தில் காட்டினாலே போதும்.