6,024 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு மகாத்மா காந்தியின் பெயர்! கர்நாடக அரசு முடிவு

6,024 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு மகாத்மா காந்தியின் பெயர்! கர்நாடக அரசு முடிவு

6,024 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்க கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் பெயரை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியது. மேலும் அதுதொடர்பான சட்டத்திற்கும் விபி ராம் ஜி என புதிய பெயரை மத் திய பாஜக அரசு வைத்தது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அந்த எதிர்ப்பை மேலும் தீவிரமாக்கும் வகையில் தற்போது கர்நாடகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் காந்தியின் பெயரை வைக்க கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.