3வது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை – நயினார் நாகேந்திரன் பேட்டி

3வது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை – நயினார் நாகேந்திரன் பேட்டி
“தமிழ்நாட்டில் பொறுத்தவரை இருமுனைப் போட்டிகள் நிலவிவந்தன. சுயேச்சையாக போட்டியிட்டவர்களோ அல்லது புதிய கட்சியைத் தொடங்கியவர்களோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை” என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபீனைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
எனது பாதயாத்திரை வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த நிறைவு நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது பிரதமர் நரேந்திர மோடி இருவரில் ஒருவர் நிச்சயமாக கலந்துகொள்வார்கள்.
உத்தேச பட்டியல் என்பதே தவறானது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் பல்வேறு மாற்றங்கள் வரும். அதிமுக, பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரலாம், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் பொறுத்தவரை இருமுனைப் போட்டிகள் நிலவிவந்தன. சுயேச்சையாக போட்டியிட்டவர்களோ அல்லது புதிய கட்சியைத் தொடங்கியவர்களோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எத்தனை முனை போட்டி வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.