‘சூர்யா 46’ படப்பிடிப்பு நிறைவு: மே மாதம் வெளியிட முடிவு!

‘சூர்யா 46’ படப்பிடிப்பு நிறைவு: மே மாதம் வெளியிட முடிவு!

‘சூர்யா 46’ படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் இப்படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் தலைப்புடன் கூடிய டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது.

நாக வம்சி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரவீனா டண்டன், மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். முழுக்க குடும்பப் பின்னணியில் உருவாகும் படமாக இதனை வடிவமைத்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கருப்பு’ படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகளை வைத்து, வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் ‘சூர்யா 46’ படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பெரும்விலை கொடுத்து வாங்கிவிட்டது.