சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
கடலூரில் திமுக, நாம் தமிழர் கட்சியின் இடையே நடந்த மோதல் தொடர்பாக சீமான் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று (14ஆம் தேதி) அரசு ஊழியர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து தனது காரில் அவர் புறப்பட்டுச் சென்றபோது, அவரது காரை வழிமறித்த திமுக பிரமுகர் ரங்கநாதன், ‘சீமான் ஒழிக’ எனக் கோஷம் எழுப்பி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சீமானை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாகக் கூறி ரங்கநாதன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதேபோல் பாதிக்கப்பட்ட ரங்கநாதன், சீமான் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விருத்தாசலம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.