இந்த நிலையில் ஆட்டோ முன்னால் செல்ல, பின்னால் வந்துகொண்டிருந்த மர்ம நபர் திடீரென காணாமல்போய் விட்டார். அதிர்ந்து போன ஆட்டோ ஓட்டுநருக்கு பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் எழுந்துள்ளது. உடனே நவாபாத் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே நீல நிறப்பெட்டி என்றாலே கதிகலங்கி போயிருக்கும் போலீசார் மீண்டும் ஒரு நீல நிறப் பெட்டியா என அதிர்ந்து போயினர். பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்டு துண்டுதுண்டாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை விசாரித்து பெட்டியை ஏற்றிச் சென்ற வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அந்த வீட்டில் பிரித்தி என்ற 32 வயது பெண்ணும், ராம் சிங் என்கிற 62 வயது நபரும் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராம்சிங் குறித்து விசாரித்தபோது அவர் ஒரு ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி என்பதும், அவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது மனைவியுடன் அவர், கோட்வாலிக்கு அருகே வசித்து வருகிறார் என்பதை தெரிந்துகொண்ட போலீசார் அங்கு சென்றனர்.
ராம்சிங்கின் இரண்டாவது மனைவி கீதாவைப் பிடித்து விசாரித்தபோதுதான், அந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ராம்சிங்கிற்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றபோதும், மூன்றாவதாக 32 வயது பீரித்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்திக்கு சிப்ரி பஜார் பகுதியில் பிரம்ம நகரில், வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்த லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்து வந்துள்ளார். கணவரைப் பிரிந்த பிரீத்தி, வயதான நபர் என்றும் பாராமல் ராம்சிங்குடன் வாழ்ந்து வந்ததற்கு அவரிடம் இருக்கும் பணமே பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது.
ராம்சிங்கை பார்க்கும் போதெல்லாம் பணம் வேண்டும் எனக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் அதை பொருட்படுத்தாத ராம்சிங் அதன்பின்னர் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் பெரும் டார்ச்சராக உணர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பிரீத்தியின் டார்ச்சர் எல்லை மீறிச் செல்ல, பொறுத்துக் கொள்ள முடியாத அவர், கோபத்தில் கொந்தளித்து கொலை செய்துவிட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக தெரியவந்துள்ளது.
பின்னர் நிதானத்திற்கு வந்த ராம்சிங் இந்த வயதிற்கு மேல் சிறைக்கு செல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்து உடலை துண்டுதுண்டாக வெட்டி எரித்து விடுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளார். அதற்காகத்தான் அந்த நீலநிறப் பெட்டியை வாங்கியிருக்கிறார். அதில் பிரீத்தியின் உடலை துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு எரித்திருக்கிறார். பாதி எரிந்த நிலையில் உடல் முழுவதுமாக எரியவில்லை எனத் தெரிகிறது.
அதன் பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பி வேறு எங்காவது கொண்டுசென்று டிஸ்போஸ் செய்துவிடலாம் என்று தான் ஆட்டோவில் ஏற்றியிருக்கிறார் என்கிற தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ராம்சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.