பார்வையற்றோர் டி20 கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி சாம்பியன்
பார்வையற்றோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணியினர், 12 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தனர்.