கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன் அபார ஆட்டம்; வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அசத்தல்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், ஷுப்மன் கில் 129 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் அதிகபட்சமாக அலிக் அதேனஸ் 41 ரனக்ளையும், ஷாய் ஹோப் 36 ரன்களையும், டெகனரைன் சந்தர்பால் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஷாய் ஹோப்பும் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 103 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ரோஸ்டன் சேஸ் 40 ரன்களையும், ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 50 ரன்னிலும், ஜெய்டன் சீல்ஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததுடன் 58 ரன்களை அடுத்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.