ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஜவோகிர், வெய் யீ முன்னேற்றம்

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஜவோகிர், வெய் யீ முன்னேற்றம்

 ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட உஸ்பெகிஸ்தானின் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர், சீனாவின் கிராண்ட்மாஸ்டர் வெய் யீ ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கோவாவின் பனாஜியில் நேற்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் ஜவோகிர், சகநாட்டு வீரரான நோடிர்பெக் யாகுப்போயவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் கால் பதித்தார். ஜவோகிர் தனது 47-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார்.

கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி: இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் உலக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு ஜவோகிர், வெய் யீ ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.