ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை ஷுட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை ஷுட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடர் விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - நியூஸிலாந்து அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி தரப்பில் நிக்கோலஸ் முஸ்டாரோஸ் (2-வது நிமிடம்), ஜோசப் மார்ட்டின் (10-வது நிமிடம்), ஆல்பர்ட் செர்ராஹிமா (12-வது நிமிடம்), புரூனோ அவிலா (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

2-வது கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. ஜெர்மனி அணி தரப்பில் அலெக் ஸ்க்வெரின் (30-வது நிமிடம்), பால் கிளாண்டர் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பிரான்ஸ் அணி சார்பில் மாலோ மார்டினாச் (30-வது நிமிடம்), ஹூகோ டோலு (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

3-வது கால் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா, நெதர்லாந்துடன் மோதியது. இதில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தது. அர்ஜெண்டினா அணி தரப்பில் 55-வது நிமிடத்தில் தாமஸ் ரூயிஸ், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார்.